HBD Vijay Antony : ஆல் இன் ஆல் அழகுராஜா விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் இன்று !
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் விஜய் ஆண்டனி. இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னையில் ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கில் ஒலி பொறியாளராக இருந்து வந்தார். பின்னர் 2005 ஆம் அண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார்.
பிறகு டிஷ்யூம், நான் அவன் இல்லை போன்ற படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனிக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘காதலில் விழுந்தேன்’படம்
அதேபோல், விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரீ கொடுத்தார்.
தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2, கொலை என பல படங்களில் நடித்து விட்டார்.
தற்போது, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் மற்றும் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிவிட்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -