Jailer Ticket Price : பெங்களூருவில் தங்கத்திற்கு நிகராக விற்பனையாகும் ரஜினியின் ஜெயிலர் டிக்கெட்!
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகின்ற 10ம் தேதி வெளியாகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் திரையிடப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதனால் தமிழக ரசிகர்கள் அங்கு உள்ள திரையரங்கில் முதல் காட்சி டிக்கெட்யை முன்பதிவு செய்துள்ளனர்.
இதனால் அங்கு டிக்கெட்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூரிவில் உள்ள சின்ன திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 முதல் ரூ1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதைதொடர்ந்து பி.வி.ஆர் ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே சிலர், சில திரையரங்குகளில் இருந்து டிக்கெட்களை மொத்தமாக வாங்கி ரூ.5000 வரை விற்பனை செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -