Jailer Audio Launch Pass : 'இங்க இருந்த ஆடியோ லான்ச் பாஸ் எங்க டா?’ மாஸ்காட்டும் ஜெயிலர் படக்குழு!
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ’காவாலா’ மற்றும் ’ஹூக்கும்’ என இரண்டு பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
அதைதொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28 ஆம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
அதேபோல், ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை இலவசமாக காண 500 நபர்களுக்கு தலா 2 பாஸ் கொடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்தது.
இதன் முன்பதிவு இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 15 வினாடிகளில் அனைத்து பாஸ்களும் விநியோகம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது.
இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆகும். முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிட நீளத்தையும் இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிட நீளத்தையும் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.