Past Lives: ஒரு வேள இருக்குமோ..? 96 படத்தின் ரீமேக் தான் ‘பாஸ்ட் லைவ்ஸ்’ திரைப்படமா?
2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இருந்தும் தமிழை தவிர மற்ற மொழிகளில் போதுமான வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள அமெரிக்க திரைப்படமான 'பாஸ்ட் லைவ்ஸ்’ 96 திரைப்படத்தின் ரீமேக் போல் இருப்பதாக பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
96 திரைப்படம் போலவே பள்ளி பருவ காதலர்கள் திருமணத்திற்கு பிறகு சந்தித்து கொள்ளும் கதையமைப்பை கொண்டுள்ளது பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படம்.
அந்த படத்தின் ட்ரைலர் பார்க்கையில் இரண்டு படங்களின் காட்சியமைப்பும் பல இடங்களில் ஒத்து போவது போலவும் தெரிகிறது.
மேலும் பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படம், 96 திரைப்படத்தின் ரீமேக் என்று எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.