சீனு ராமசாமி படத்தில் ஒப்பந்தமாகிய இரவின் நிழல் நாயகி பிரிகிடா!
பிளாக் ஷீப் தயாரிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் வெப் தொடரின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி பிரிகிடா.
தன்னுடைய உழைப்பினால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். பிக் பாஸ் புகழ் முகேன் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரிகிடா நடித்திருந்தார்.
அதன்பிறகு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலதரப்பட்ட சினிமா, ஊடகம் மற்றும் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
இரவின் நிழல் படம் வெளியாகி பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்நிலையில் நீர்ப்பறவை , தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வரும் கலைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளார் பிரிகிடா