HBD Janaki: கானக்குயிலாக கவனம் ஈர்த்த பாடகி ஜானகியின் பிறந்தநாள் இன்று!
ABP NADU | 23 Apr 2023 04:52 PM (IST)

எஸ் ஜானகி
1
தென்னிந்தியாவின் இசையரசி என்று அழைக்கப்படுபவர் பாடகி ஜானகி. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
2
இந்தியாவின் பழைய மற்றும் சிறந்த பாடகிகளுள் ஒருவர் ஜானகி.
3
இவர் தமிழ் உள்ளிட்ட 17 இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
4
இவர் மைசூரு பல்கலைகழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.
5
இவர், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது மற்றும் கர்நாடக அரசின் கர்நாடக ராஜ்யோத்சவா விருது பெற்றிருக்கிறார். 2013 இல், அவர் பத்ம பூஷனை ஏற்க மறுத்துவிட்டார்.
6
மரியாதை நிமித்தமாக அனைவராலும் ஜானகி அம்மா என்று அழைக்கப்படும் இவர் இன்று தனது 85 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.