Prabhu Deva : பெண் குழந்தைக்கு டாடியான டான்சர் பிரபு தேவா!
ஸ்ரீஹர்சக்தி | 10 Jun 2023 06:36 PM (IST)
1
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. இவர் 90களில் கோலிவுட்டை இவரது நடனத்தால் கலக்கி வந்தார்.
2
தமிழில் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
3
இவர் நடிப்பில் பொய்க்கால் குதிரை, பகிரா போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவை எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
4
இவர் சமீபத்தில் ஹிமானி சிங் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
5
தற்போது இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
6
இவருக்கும் இவரது முன்னாள் மனைவிக்கும் இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு மகன் புற்றுநோயால் உயிரிழந்தார். இவரின் மற்றொரு மகன் சென்னை லயோலா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.