Indian 3 : இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்கு முன்னரே மூன்றாம் பாகத்துக்கு அடித்தளம் போடும் சினிமா வட்டாரம்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து மக்களின் மனதை கொல்லை கொண்டவர் கமல் ஹாசன்.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது
இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் ஆகிய பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் கமல்.
இந்த நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சி நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், “இந்தியன் 3 பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.