Vignesh Shivan:'உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..'அன்பு மகன்களுக்கு விக்கி-நயன் ஆசையாக வைத்த பெயர் இதுதான்!
கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, விக்னேஷ் சிவன்-நயன்தாரா
விக்னேஷ் சிவன்-நயன்தாராவிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, தங்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்துள்ளதாக விக்கி இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார்
தீபாவளி பண்டிகையன்று “ஹேப்பி தீபாவளி” எனக்கூறி இவர்கள் வெளியிட்ட வீடியோ வைரலானது
விக்னேஷ் சிவன், அடிக்கடி தனது மகன்கள் குறித்து சமூக வலைதள பதிவுகள் மூலம் பகிர்ந்து வந்தார். ‘சன் கிஸ்ட்’ என இந்த புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்
மகன்களை, உயிர்-உலகம் என்று, தனது பதிவுகளில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் விக்கியும் நயனும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன
இதையடுத்து, விக்னேஷ் சிவன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், தங்களது குழந்தைகளுக்கு, ‘உயிர் ருத்ரோநீல் N சிவன்’ மற்றும் ‘உலக் தெய்விக் N சிவன் ’ எனவும் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இவரின் பதிவினை விக்கி-நயன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்
சிலரோ, ‘வெரி ஸ்வீட் நேம்..’ என குழந்தைகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை பாராட்டி வருகின்றனர்
இன்ஸ்டாவில், விக்னேஷ் சிவன் புதிதாக பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இதுதான்
இவை, வைரலாகி வருகின்றன