Vijay Car Collection : கார்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. நீண்டு கொண்டு போகும் விஜய்யின் கார் கலக்ஷன்!
பலருக்கும் வண்டி வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதை வாங்கிய பின் எடுத்து ஓட்டுகிறார்களோ இல்லையோ, வீட்டின் முன் ஜம்முனு நிறுத்தி வைத்து விடுவார்கள்.
சினிமா பிரபலங்களும் அப்படிதான். பைக், கார், ஹெலிகாப்டர் என தங்களின் வசதிக்கு ஏற்ப பலவற்றை வாங்கி வைப்பர்.
அஜித்திற்கு ஆட்டோ மொபைல்ஸ் மீது ஆர்வம் இருக்கிறது என ஊருக்கே தெரியும். ஆனால், விஜய்க்கும் அதில் ஆர்வம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.
அவரது நெருங்கிய நண்பரான சஞ்சய், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் வாங்கிய கார்களை பெற்றி பேசினார்.
டாடா எஸ்டேட் 1992 - 2000 மாடல், டொயோட்டா செரா 1990 - 1996 மாடல், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம், BMW X6 - 2008–தற்போதைய மாடல், நிசான் எக்ஸ்-டிரெயில் - 2000, ஆடி ஏ8, பிரீமியர் 118 NE, மினி கூப்பர் எஸ் ஆகிய கார்களை வைத்துள்ளாராம் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தொகுதி ரீதியாக பரிசு வழங்கும் விழா நடத்தப்பட்டது. அதில், கலந்த கொண்ட விஜய், தன் வீட்டில் இருந்து தானே கார் ஓட்டிக்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.