Suriya Jyotika Photos : ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே.. சூர்யா-ஜோவின் பின்லாந்து டைரீஸ்!
நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா கோலிவுட்டின் க்யூட் ஜோடிகளுள் ஒருவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திரங்கள், ஆண்டுகள் கடந்தும் சந்தோஷமாக தங்கள் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த இணையருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகளும் உள்ளனர். பல ஆண்டுகளாக சென்னையில் வசித்துக்கொண்டு இருந்த இவர்கள், ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.
சினிமா உலகில் கலக்கி வரும் இவர்கள், அடிக்கடி டூர் செல்வது வழக்கம். இந்த ஆண்டின் முதல் மாதத்திலே பின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.
பனி பிரதேசமான பின்லாந்தில் தங்கி, நார்தர்ன் லைட்ஸை கண்டுகளித்துள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஒன்றிணைத்து ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர்.
அந்த ஊர் உணவுகளை சாப்பிட்டு மற்ற சுற்றுலா தளங்களையும் கண்டுகளித்துள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் இது போன்ற பயணங்கள் நிறைந்து இருக்கும் என்பதையும் ஜோதிகா, பதிவிட்டுள்ளார்.
ஆக, சூர்யா -ஜோதிகா ஜோடியின் க்யூட்டான ட்ராவல் புகைப்படங்களை இனி வரும் காலத்திலும் எதிர்ப்பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -