Sneha Photos : கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேனே.. நடிகை சினேகாவின் அசத்தல் சேலை க்ளிக்ஸ்!
மும்பையில் பிறந்து துபாயில் வளர்ந்த நடிகை சினேகாவின் ரியல் பெயர் சுஹாசினி. முதன்முதலாக மலையாள படத்தில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவே இவருக்கு கைக்கொடுத்தது
ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஜனா, போஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வருகின்றனர் என பல தகவல்கள் பரவியது.
இருவரும் ஒன்றாக பல இடங்களில் காணப்பட்டனர். முதலில் இல்லை என மறுத்தாலும், இந்த ஜோடி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சினேகா - பிரசன்னா ஜோடிக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்தா மகளும் உள்ளனர்.
முன்பு போல் இல்லையென்றாலும் அவ்வப்போது படம் நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கும் இவர் சினேகாலயா சில்க்ஸ் என்ற புடவைக்களுக்கான பிரத்யேக ஜவுளி கடையை நடத்தி வருகிறார்.
இந்த பிராண்டிற்கான போட்டோ ஷூட்டை லண்டன் நகரில் உள்ள லண்டன் ஐ அருகில் எடுத்துள்ளார்.