Sivakarthikeyan Birthday: தொகுப்பாளர் முதல் கோலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகன் வரை..அயலான் நடிகர் குறித்த அறியப்படாத தகவல்கள்!
சிவகார்த்திகேயன் குறித்து அறியப்படாத தகவல்கள் - கோலிவுட்டில் பெரிய நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது அப்பாவைப் போல காவல் துறையில் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅப்பா இறந்த பிறகு சிவகார்த்திகேயனால் காவல் துறையில் வேலையில் சேர முடியவில்லை. அதனால் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதிலும் அவருக்கு விருப்பம் இல்லாமல் போனது
கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வாங்கிய நடிகர் சிவா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்றதற்காக, அப்படத்தின் இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயனுக்கு ஆடி காரை பரிசாக வழங்கினார்
சிவகார்த்திகேயனுக்கு ப்ராங்க் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஒரு முறை அவரது அக்காவிற்கு கணவராக வரப்போகிறவரை சிகிரெட்டுடன் வெளியில் பார்த்ததாக தனது அக்காவிடம் விளையாட்டிற்காக கூறினார். இது அவர்களின் வீட்டில் பெரிய பிரச்சனையானது
மக்களுக்கு மிகவும் பிடித்த டிவி தொகுப்பாளர்களுள் முக்கியமான இடத்தில் உள்ளவர், சிவா. இவரது ‘அது இது எது’ நிகழ்ச்சி மாபெறும் ஹிட் அடித்தது
சிவகார்த்திகேயனுக்கும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடிக்கும் ஒரே நாளில் பிறந்த நாள்
சினிமா துறையில் பெரிதாக சாதித்திருக்கும் சிவகார்த்திகேயன், வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இன்றி வாழ்ந்தவராம்
சிறுவயதிலிருந்தே அதிகமான நகைச்சுவை திறனைக் கொண்டிருந்தவர், சிவகார்த்திகேயன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -