Silk Smith Look alike : அட சில்க் ஸ்மித்தாவா இது.? மார்க் ஆண்டனி ட்ரெய்லரில் வரும் இந்த பெண் யார்?
மார்க் ஆண்டனி படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கிய இப்படத்தில் விஷாலும் எஸ்.ஜே சூர்யாவும் மாற்றி மாற்றி போட்டி போட்டு நடித்துள்ளனர்.சுனீல், செல்வராகவன், ரித்து குமார், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி ட்ரெய்லரின் தொடக்கத்தில் கார்த்தி டப்பிங் கொடுத்து இருப்பார்.
விஷால் மீது லைகா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கால், மார்க் ஆண்டனி படம் மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படம் திட்டமிட்டது போல் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
சில்கின் முக ஜாடயை கொண்ட காந்தி விஷ்ணு பிரியா எனும் இந்த பெண் இன்ஸ்டாவில் பிரபலமானவர். இந்த ட்ரெய்லர் வந்ததும், யார் இவர் என்று பலரும் தேடத்தொடங்கியுள்ளனர்.
இன்ஸ்டாவில் ரீல்ஸ்களையும், போட்டோஷூட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
முக்கியமாக சில்க் ஸ்மித்தாவின் விண்டேஜ் லுக்ஸ் மீது கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றவாரு மேக்-அப் செய்து வருகிறார். சில்க் போன்ற சொக்க வைக்கும் கண்களை இவர் பெற்றுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -