Samantha Latest Photos : சிறப்பு விருந்தினராக சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!
ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த சமந்தா ரூத் பிரபு, விண்ணை தாண்டி வருவாயாவின் தெலுங்கு வெர்ஷனில் (யே மாயா சேசாவே) கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அதர்வாவின் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழிலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்த சமந்தாவின் காட்டில் அப்போது அடை மழைதான். படம் சுமாராக இருந்தாலும் இவரை திரையில் கண்டு ரசிக்க பலரும் திரையரங்கிற்கு செல்வார்கள்.
ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் டெம்ப்ளேட் புளித்து போன பின்னர், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும், சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார்.
புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் இன்னும் பலரின் கண்களில் அப்படியேதான் இருக்கிறது. உடல் நலக்குறைவால் பெரிதாக நடிக்காத சமந்தா, தயாரிப்பில் களமிறங்கிவிட்டார். கூடிய விரைவில், படங்களில் நடிப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிட்டாடல் சீரிஸின் ஹிந்தி வெர்ஷனில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.