Rashmika Mandanna: ராஷ்மிகாவிற்கு மோதிரம் பரிசளித்தாரா விஜய் தேவரகொண்டா? காதல் கிசுகிசுக்களுக்கு பதிலளித்த நாயகி!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா. வாரிசு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்ற படத்தில் முதன்முதலாக சேர்ந்து நடித்திருந்தார். ரசிகர்களுக்கு, விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி மிகவும் பிடித்திருந்தது.
இதையடுத்து, விஜய் தேவரகொண்டாவிற்கும் ராஷ்மிகாவிற்கும் காதல் என நெடுநாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டாதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் புதிய காதல் கிசுகிசு ஒன்று வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா, சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ஒரு மோதிரம் அணிந்திருப்பார். இந்த மோதிரத்தை விஜய் தேவரகொண்டாதான் அவருக்கு பரிசளித்தார் என்றும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஒருவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில், “சீக்கிரமே நல்ல செய்தியை எதிர் பார்க்கலாம்” என குறிப்பிட்டிருந்தார்.
நடிகை ராஷ்மிகா “ரொம்ப யோசிக்காதீங்க..” என சிரிக்கும் எமோஜியும் ஹார்டின் எமோஜியும் போட்டு அந்த ட்வீட்டிற்கு, பதிலளித்துள்ளார். ஆனால், அந்த ட்வீட்டில் வெளியாகியிருந்த தகவலை ராஷ்மிகா மறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -