Rakul Preet Singh : பாரம்பரிய உடையில் அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்!
டெல்லியை சார்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரகுல் ப்ரீத் சிங், செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமெக்கான ‘கில்லி’படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2011ல் யுவன், 2013ல் என்னமோ ஏதோ ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும், 2017ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இதே காம்போ 2018ல் வெளியான தேவ் படத்திலும் இணைந்து நடித்திருந்தது. தம்பியுடன் நடித்த ரகுல் அண்ணன் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் படங்களில் பெரிதாக நடிக்கவில்லையென்றாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் பிரபலமான ஜாக்கி பக்னானியும் இவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவரின் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் பதிவு செய்தார் ரகுல்.
இன்ஸ்டா குயின் ரகுல், சிவப்பு நிற சேலைக்கு தங்க நிற பிளவுஸ் அணிந்து பார்க்க அழகாக உள்ளார். இந்த பாரம்பரிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதற்கு, “தெலுங்கு அம்மாயி..”என்ற கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.