Rajinikanth : 'பழசை என்னைக்குமே மறக்கக்கூடாது..தான் கண்டக்டராக பணிப்புரிந்த இடத்திற்கு மீண்டும் சென்ற ரஜினிகாந்த்..!
சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து கோலிவுட்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. 525 கோடிகளுக்கும் மேல் வசூலை இப்படம் குவித்து கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.
அதன் பிறகு ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், தான் 70களில் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீர் விசிட் அடித்துள்ளார்.
தன் கரியரின் தொடக்க கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி, அங்கிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த சர்ப்ரைஸ் விசிட் அங்குள்ள ஊழியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகின்றன.