Rajinikanth Raghava Lawrence : குருவிடம் ஆசீர்வாதம் பெற்ற சிஷ்யன்.. வைரலாகும் ராகவா லாரன்ஸின் பதிவு!
தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, உழைப்பினால் டான்ஸ் மாஸ்டராக முன்னேறியவர் ராகவா லாரன்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடனத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இயக்கம், நடிப்பு என தன்னிடம் இருக்கும் பல வித்தைகளை இறக்கினார்.
முனி படத்தில் தொடங்கி பல ஆண்டுகளாக பேய் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.
அந்தவகையில் ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்ட பலரும் நடித்து ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ்.
முதல் பாகத்தை போல, இந்த பாகமும் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சந்திரமுகி 2 குறித்த அறிவிப்பு வந்த பின்,முதல் பாகத்தில் வேட்டையனாக நடித்த ரஜினியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
தற்போது, சந்திரமுகி 2 வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தனது குருவான ரஜினியின் காலில் விழுந்து மீண்டும் ஆசீர்வாதம் பெற்றுள்ளார் லாரன்ஸ். இதுகுறித்த வீடியோவையும், புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம். இன்று நான் எனது தலைவர் மற்றும் குருவாகிய ரஜினிகாந்தை சந்தித்தேன். ஜெயிலரின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக அவரை வாழ்த்துவதற்காகவும், செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் சந்திரமுகி 2 ரிலீஸுக்கு ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவும் அவரை நேரில் சென்று பார்த்தேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். தலைவர் இஸ் ஆல்வேஸ் க்ரேட். குருவே சரணம்.” என்று லாரன்ஸின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -