Priya Anand Photos : ஜிமிக்கி போட்ட மயிலே.. சேலையில் ரசிகர்களை மயக்கும் பிரியா ஆனந்த்!
2009ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'வாமனன்' திரைப்படத்திலும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்திலும் நடித்து இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆச்சு அசலாக அமெரிக்க பெண்ணை போல தோற்றமளிக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
மாடர்ன் கேர்ள், குடும்ப பாங்கான கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடிய பிரியா ஆனந்த் நடித்த எதிர் நீச்சல், எல்.கே.ஜி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன.
மயிலாடுதுறையில் பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
அமெரிக்காவில் அல்பானி பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பை முடித்த பிரியா ஆனந்த் இந்தியா திரும்பியதும் மாடலிங் துறையில் நுழைந்துஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார்.
கடந்தாண்டு வெளியான லியோ படத்தில் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.