Priyanka Mohan:சொக்கவைக்கும் பேரழகி.. பிரியங்கா மோகனின் சமீபத்திய க்ளிக்ஸ்!
கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “டாக்டர்”. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். பார்த்தவுடன் பிடித்து விடும் அளவுக்கு முதல் படத்தில் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். துறுதுறுவென நடிக்கும் திறன் இருப்பதால் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதுமட்டுமல்லாமல் டாக்டர் படத்தில் அவரின் காமெடி கலந்த நடிப்பை அனைவரும் பாராட்டி தள்ளினர். 1994 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன், பெங்களூரில் தான் பிறந்து வளர்ந்துள்ளார். ஆனால் படித்தது சென்னையில் தான். இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர், தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த பிரியங்காவுக்கு மாடலிங்கில் அதீத ஆர்வம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு கிரிஷ் ஜி இயக்கிய கன்னடத் திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் பிரியங்கா அறிமுகமானார்.
விக்ரம் குமார் இயக்கிய நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து தான் தமிழுக்கு நடிக்க வந்தார். டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் ஜோடி சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த பொங்கலுக்கு தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. அதிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படைகளை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் அவரது போஸ்டிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -