Naai Sekar pics: ’நாய் சேகர்’ திரைப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியன்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் சதீஷ். கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்து வந்த சதீஷ் அவரின் அன்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் படம் , மதராச பட்டிணம், மான் கராத்தே, தாண்டவம், கத்தி, பைரவா, வேலைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான அண்ணாத்த , ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லக்ஷ்மி நடிக்கிறார்.
கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் நாய் சேகர் படத்தை புரமோட் செய்யும் சதீஷ் , முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாயுடன் , எனிமி படத்தி “மாலை டும் டும்” பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனை ரீட்வீட் செய்த சதீஷ் எனது ‘நாய் சேகர்’ படத்தை புரமோட் செய்ததற்கு நன்றி ‘ என கேலியாக ஒரு பதிவிட்டிருந்தார்.
நாய் சேகர் படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார்
படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -