மிஷ்கின் - விஜய் சேதுபதி காம்போவில் உருவாகும் ட்ரெயின் படத்தின் பூஜை க்ளிக்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கினின் அடுத்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
மிஷ்கின் இயக்கும் படங்களுக்கென்று தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலகெங்கும் பல ரசிகர்கள் உண்டு. அவருடைய திரைப்படத்தில் அவர் வைக்கும் புதுவிதமான ஷாட்களை ரசிக்க தியேட்டருக்கு சினிமா ரசிகர்கள் குவிவார்கள்.
கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் சைக்கோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சைக்கோ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவே கலெக்ஷன் செய்தது.
அடுத்ததாக நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 வை இயக்கிய நிலையில் அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்க, இயக்குநர் மிஷ்கின் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ட்ரெயின் என்ற திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.
இந்த ட்ரெயின் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.