Mrunal Vijay Devarakonda : ரீல் ஜோடியுடன் ஹோலி கொண்டாடிய சீதா ராமம் நடிகை!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகைகளுள் ஒருவர் மிருணாள் தாக்கூர். தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு சீதா ராமம் மூலம் பரிட்சயம் ஆனார்.
சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்
அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பலர் இவரை பின் தொடங்க ஆரம்பித்தனர். அதற்கு ஏற்றவாறு இவரும் அடிக்கடி போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்
இந்நிலையில், பல பெண் ரசிகர்களை கொண்ட அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் எனும் படத்தில் நடித்துள்ளார்
இப்படத்தின் ஷூட், சமீபத்தில்தான் முடிவடைந்தது. படத்தில் இடம்பெறும் பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது
தற்போது பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக, ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இதில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.