Mrunal Thakur Photos : ஹாய் நானா நடிகை மிருணாள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்!
சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூருக்கு கல்லூரி படிக்கும் போதே சீரியல் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால், கல்லூரி படிப்பை பாதியிலே விட்டுவிட்டு நடிக்க தொடங்கினார்
ஹ்ரிதிக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில்தான் இவர் அறிமுகமானார் என்று நினைத்து வருகின்றனர். ஆனால், இவர் முதன்முதலாக நடித்த படம் ‘லவ் சோனியா’
'தி மேட்ரிக்ஸ்: ரெசரெக்ஷன்ஸ்' எனும் ஹாலிவுட் படத்தின் ஆடிஷனுக்கு மிருணாள் சென்று இருந்தார். ஒரு சில காரணங்களால் அந்த வாய்ப்பு பிரியங்கா சோப்ராவிற்கு சென்றது
மிருணாளுக்கு செல்லப்பிராணிகள் மீது அவ்வளவு ஆசையாம். தெருவில் உள்ள நாய், பூனைகளுக்கு உதவி வருகிறார். அத்துடன், பில்லோ பாய் எனும் குட்டி பூனையை வளர்த்து வருகிறார்
ஹாய் நானா பட ஹீரோயினுக்கு புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது. அனைத்து வகையான புத்தங்களையும் ஆர்வமாக வாசிப்பாராம்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பெரிய ரசிகையான இவர், அவரின் சுல்தான் பட ஆடிஷனுக்கும் சென்றுள்ளார். ஆனால், இந்த வாய்ப்பும் மிருணாளை விட்டு சென்றது.