Metaverse Marriage| இப்படியும் கல்யாணம் பண்ணலாமா? மெட்டா வெர்ஸ் திருமணம் க்ளிக்ஸ்
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் என்பவரும், ஜெனநந்தினி என்பவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்துள்ளனர்.
தினேஷ் ஐ.டியிலும், ஜெகநந்தினி சாஃப்ட்வேர் உருவாக்கத்திலும் பணிபுரிபவர்கள். இவர்களது திருமணம் பிப்ரவரி 6-ம் தேதி மெட்டாவெர்ஸில் நடைபெற்றுள்ளது
திருமண ஜோடியும், திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் விருந்தினர்களும் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்து கொண்டுள்ளனர்.
திருமண வாழ்த்து தெரிவிப்பவர்கள், கூகுள் பே அல்லது வேறு செயலிகள் மூலம் அன்பளிப்பை வழங்கலாம் என அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தது ஏற்கனவே வைரலானது.
பிப்ரவரி 6-ம் தேதி காலை, விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுர கிராமத்தில் திருமணமும், அதே நாள் மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த இந்த புதுவித திருமணம், ஹாரி-பாட்டர் மெட்டாவெர்ஸ் தீமில் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.