Mamitha Baiju Photos : ப்ரேமலு படத்தின் க்யூட் நடிகை..யார் இந்த மமிதா பைஜு?
இந்தாண்டின் தொடக்கம் முதலே, மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், ப்ரேமலு ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.
காமெடி நிறைந்த காதல் கதை கொண்ட இப்படம் ஹைதராபாத்தில் படம்பிடிக்கப்பட்டது.
இதில் நடித்த மமிதா பைஜூ, தற்போது பலரின் கனவு கன்னியாக வலம் வருகிறார். ப்ரேமலு படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகிறது.
பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுடன் நடிக்க மமிதா ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர், ஒரு சில காரணத்தால் இப்படத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ் ஆகியோர் இணைந்தனர்.
வரும் மார்ச் 22ஆம் தேதி வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் ரிபெல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மமிதா.
மமிதா பைஜூ, கோ கோ, சூப்பர் சரண்யா உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது