Mahima Nambiar : ஒரே ப்ரேமில் மூன்று ஜாம்பவான்களுடன் மஹிமா.. நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட சந்திரமுகி நடிகை!
மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ஸ்லம்டாக் மில்லியனர்’படத்தில் நடித்த நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடித்துள்ளனர்.
அந்தவகையில் படத்தின் கதாநாயகி என்ற முறையில், மஹிமா அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
இதில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், முத்தையா முரளிதரன், சனத் ஜெய சூர்யா உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
“இதைவிட பெரிதாக நான் கேட்டுவிட முடியாது. ஒரே ப்ரேமில் மூன்று ஜாம்பவான்கள்....இந்த தருணம் என் நினைவில் எப்போதும் இருக்கும். 800 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படங்கள்தான் இவை. முத்தையா முரளி சார், உங்கள் மனைவியான மதி மலர் ஜீயின் கதாபாத்திரத்தில் நடித்ததில் பெருமை கொள்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் அனைவரும் படம் பார்க்கும் வரை ஆர்வமாக காத்திருப்பேன். நேரில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்த சச்சின் சார் மற்றும் சனத் ஜெய சூர்யா சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநர் ஸ்ரீபதிக்கு நன்றி.” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மஹிமா.
சாட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஹிமா, குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் மஹிமா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -