Cinema Updates: புஷ்பா 2 டீசர் ரிலீஸ் தேதி..ஒரே பாடலில் பல பிரபலங்கள் நடனம்..இன்னும் பல சினிமா அப்டேட்ஸ்..இதோ!
‘வாரிசு’ பட நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவர் நாயகியாக நடித்துள்ள புஷ்பா 2:தி ரூல் படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசர், வரும் 7ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 8ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட், இன்று ராஷ்மிகாவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது
ஆர்.ஆர்.ஆர் படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக குத்தாட்டம் போட்ட ஜூனியர் என்.டி.ஆர், ஹிரித்திக் ரோஷனுடன் “வார்-2” படத்தில் இணைகிறார். இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டாகி வருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம், ஓபன்ஹீமர். க்ரெட்டா கர்விக் என்பவர், மார்கோட் ரொப்பியை வைத்து இயக்கியுள்ள படம், பார்பி. இந்த இரண்டு படங்களையும் ஹாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த படத்திற்கு முதலில் செல்வது என, ரசிகர்கள் ட்விட்டரில் விவாதம் நடத்தி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் இன்று பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை குவித்து வருகின்றனர்
‘வீரம்’ படம், ‘கிசி கா பாய் கிசி கி ஜான்' என்ற பெயரில் இந்தி மொழியில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று வெளியான ‘ஏன்ட்டம்மா..’ என்ற பாடலில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சல்மான் கானுடன் இணைந்து நடனமாடியுள்ளனர். இந்த பாடலும் இன்று ட்ரெண்டிங்கில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -