Khushboo Photos : திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு!
80களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்புவிற்கு, அவரின் ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பின், இயக்குநர் மற்றும் நடிகருமான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு, அவந்திகா, ஆனந்திதா என இரு பெண்கள் உள்ளனர்.
தற்போது, திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்தவகையில், இந்தமுறை நடிகை குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டளைதாரர் என்பவர், அந்த வருடத்திற்கு நடக்கும் பூஜைக்கு தேவையான பொருட் செலவுகளை அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
“கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றேன். திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. இது எனது பாக்கியம் ஆகும். குறிப்பிட்ட நபர்களே, இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர், அதுவும் தெய்வமே அந்த நபரை தேர்வு செய்யும் என்பது நம்பிக்கை. எனக்கு ஆசிர்வாதம் செய்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என உணர்ந்து , தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பல நல விஷயங்கள் நடக்கும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன். அத்துடன், இந்த உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்தனை செய்தேன். ஓம் நம சிவாய நமஹ.” என தனது கருத்துக்களையும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த ஆன்மிக பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -