Harry Potter: ‘மீண்டும் மாயாஜால உலகில் பயணிக்க தயாரா?’ நெடுந்தொடராக வெளியாகிறது ஹாரி பாட்டர் கதை!
ஹாரி பாட்டர் கதைகளை மாயாஜால பிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
1998ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை வெளியான ஹாரி பாட்டர் புத்தகங்கள் 2001ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களாக உருவாக தொடங்கின.
ஹாரி பாட்டர் படம், புத்தகங்களில் உள்ள கதைகளை தழுவி எடுக்கப்பட்டு 8 பாகங்களாக வெளியானது.
இதில் இடம் பெற்றிருந்த கதாப்பாத்திரங்கள், ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தன.
ஹாரி பாட்டர் புத்தகங்கள் தொடர்களாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை கேட்ட சில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிதாக உருவாக உள்ள ஹாரி பாட்டர் தொடரில் புதுப்புது நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
ஹாரி பாட்டர் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த டேனியல் ராட்க்ளிஃப், ரூப்பர்ட் க்ரிண்ட், எம்மா வாட்சன் ஆகியோர் புதிதாக உருவாக உள்ள தொடரில் கெஸ்ட் ரோலில் நடிப்பார்கள் என நம்பப்படுகிறது.