Hansika Motwani Photos : அடடே.. ஹன்சிகாவா இவங்க?அடையாளமே தெரியலயே!
ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு, ஹந்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
முன்னதாக சற்று பருமனாக இருந்த ஹன்சிகா, காலப்போக்கில் உடலை குறைத்து விட்டார். இவர் எடையை குறைத்த போது, ஹன்சிகா ரசிகர்கள் பலர், “ஹன்சிகாவின் பழைய லுக்தான் நன்றாக இருக்கிறது”என்றெல்லாம் கமெண்ட் செய்தனர்.
குட்டி குஷ்பு என்று அழைக்கப்பட்டு வரும் ஹன்சிகா, இப்போதெல்லாம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்
மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி, தனது நண்பரான சோஹைல் கதுரியா என்பவரை 2022 ஆம் ஆண்டில் மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது