Varun Dhawan : அப்பாவாக போகிறேன்.. பாலிவுட் நடிகர் வருண் தவான் நெகிழ்ச்சி!
தனுஷ்யா | 19 Feb 2024 12:09 PM (IST)
1
பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான் “மை நேம் இஸ் கான்”என்ற படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்தார்.
2
2012 ஆம் ஆண்டில் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தில் நடித்தார்
3
அதனை தொடர்ந்து மெயின் தேரா ஹீரோ, ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா, பத்லாபூர், ஏபிசிடி 2, தில்வாலே, ஜுட்வா 2, அக்டோபர், சுய் தாகா: மேட் இன் இந்தியா, கலங்க் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
4
அட்லீ இயக்கத்தில் விஜய்- சமந்தா நடிப்பில் உருவான தெறி படத்தின் ஹிந்தி வெர்ஷனான, “பேபி ஜான்”என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5
இந்நிலையில், அவரது மனைவி நடாஷா தலால் கர்ப்பமாக உள்ளதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார் தவான்.
6
இந்த இணையருக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.