Sonam Kapoor Photos : ‘பழைய நிலைக்கு திரும்ப 16 மாதங்கள் ஆனது..’ பாலிவுட் நடிகை சோனம் கபூர் உருக்கம்!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அனில் கபூரின் மகளான சோனம் கபூரும் பாலிவுட்டில் நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசவாரியா படத்தின் மூலம் அறிமுகமாகி, டெல்லி 6ல் அபிஷேக் பச்சனுடன் நடித்தார். டெல்லி 6 படத்தில் சோனம் கபூர் நடனமாடிய மசக்கலி பாடல் இப்போதும் பலரது ப்ளேலிஸ்டை ஆண்டு வருகிறது.
2013 ஆம் ஆண்டில் இவரும், நடிகர் தனுஷும் ராஞ்சனா படத்தில் நடித்தனர். அப்படத்தில் இடம்பெற்று இருக்கும், “அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை”பாடலும் செம ஃபேமஸ்.
2018 ஆம் ஆண்டில் ஆனந்த் அஹுஜா எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு வாயு எனும் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சோனம் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
குழந்தையை பெற்றெடுத்து தாயாக மாறும் பெண்களின் உடம்பில் நடக்கும் மாற்றங்களை பற்றி, சோனம் கபூர் அவரது பார்வையை பதிவிட்டுள்ளார்.
அதில், “என் உடம்பு பழைய நிலைக்கு திரும்ப 16 மாதங்கள் எடுத்துக்கொண்டது. அதிபயங்கரமான டயட், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் பொறுமையாக எனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டேன். நான் முழுமையாக மாறிவிடவில்லை. ஆனால், நான் எப்படி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேனோ அந்த இடத்தை ஓரளவுக்கு நெருங்கிவிட்டேன். என் உடலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். பெண்ணாக இருப்பது மிகவும் அற்புதமான விஷயம்.” எனும் கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -