Aishwarya Umapathy Reception : சினேகா முதல் ஸ்டாலின் வரை.. அர்ஜுன் - தம்பி ராமையா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!
புதுமண தம்பதிகளான ஐஸ்வர்யா மற்றும் உமாபதி வரவேற்பு விழாவில் அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனுஷ்கா கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுகவை சார்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, விழாவில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்தினார்.
அடுத்தடுத்த இலக்குகளை எட்டி வரும் தமிழ் சினிமாவின் ஹீரோ சிவகார்த்திகேயன் விழாவில் கலந்து கொண்டார்.
கடந்தாண்டு வெளியான லியோ படத்தில் அர்ஜுனை ஹரால்ட் தாஸாக காண்பித்த, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லைனா எப்படி?
அர்ஜுன் நடித்த ஜெண்டில் மேன், முதல்வன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷங்கரும் வருகை தந்து இருந்தார்.
நடிகை சினேகா அவரது கணவர் பிரசன்னாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி மேடையில் புகைப்படம் எடுத்த போது..
மனைவி துர்காவுடன் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநருமான பிரபு தேவா வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்
இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நடிகர் சத்யராஜ், ஐஸ்வர்யா உமாபதி வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.