Mirna Menon : பாத்து பண்ணுங்க மேடம்! ஜெயிலர் 2க்கு மும்மரமாக ஸ்டண்ட் பயிற்சிகளை மேற்கொள்ளும் மிர்னா!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தில் அவரின் மருமகளாக நடித்தவர் நடிகை மிர்னா மேனன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த 2020ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிக் பிரதர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி கிரேஸி பெல்லோ, உக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான 'புர்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இருப்பினும் ஜெயிலர் படம் தான் மிர்னா மேனனுக்கு நல்ல ஒரு பிரபலத்தை பெற்று கொடுத்தது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஜெயிலர் 2 படத்திலும் மிர்னா கமிட்டாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா கடுமையாக ஸ்டாண்ட் பயிற்சிகளை பயிற்சியாளர் உதவியோடு செய்து வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த பயிற்சி ஒரு வேலை ஜெயிலர் 2 படத்துக்கானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -