Aditi Rao Hydari : பழுத்த மிளகாய் நிற புடவையில் அசத்தும் நடிகை அதிதி ராவ்!
நடிகை அதிதி ராவ் ஹைதாரி பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
அதிதி ராவ் ஹைதாரி, ஹைதராபாத் மாநிலத்தின் (சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா) முன்னாள் பிரதமர் அக்பர் ஹைதாரியின் கொள்ளுப் பேத்தியும், அஸ்ஸாமின் முன்னாள் ஆளுநரான முஹம்மது சலே அக்பர் ஹைதாரியின் பேத்தியும் ஆவார்.
வருமான வரித்துறையின் உதவி ஆணையராக இருந்த சத்யதீப் மிஸ்ராவை அதிதி தனது 21வது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் 2013ல் பிரிந்தனர்.
லண்டன் பாரிஸ், நியூயார்க் எனும் படத்திற்காக இரண்டு பாடல்களை பாடியுள்ளார். தனுஷுடன் காத்தோடு காத்தானேன் பாடலையும் ஷான் ரோல்டனுடன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ எனும் பாடலையும் பாடியுள்ளார்.
ஆதிதி, கேரளாவை சார்ந்த களரிபயட்டு கலையிலும் தேர்ச்சி பெற்றவர். சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் இவரும் காதலித்து வருவதாக தகவல் பரவிவருகிறது.
இவர் நடித்த முதல் தமிழ் படமான சிருங்காரம், 3 தேசிய விருதுகளையும், 2 மாநில விருதுகளையும் வென்றது.