Arya Transformation : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. மாஸ் காட்டும் நடிகர் ஆர்யா!
அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
அதன் பின்னர் பட்டியல், சர்வம், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ஆரம்பம், டெடி உள்ளிட்ட பல விதமான படங்களில் நடித்து வந்தார்.
கஜினிகாந்த் படத்தில் சாயிஷா உடன் நடித்த ஆர்யா, அவரை காதலித்து 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரையில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். உடற்பயிற்சி, டயட் என சிரமப்பட்டு உடல் எடையையும் கூட்டினார்.
இப்போது எக்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காகவும் கடினமாக வொர்க்- அவுட் செய்து வருகிறார்.
இந்நிலையில், பேக் டூ ஃபார்ம் வந்த அவரது உடலின் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.