Actress Trisha: பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக.. நடிகை த்ரிஷா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா இவன் தானா இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன் திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன் இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே ஒளிந்திடும் எனையே உனது விழிகள் தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய் பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய் படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
ஞாயிறு மதியம் சமையல் உனது விரும்பி நீ சமைத்திடுவாய் வேடிக்கை பார் என என்னை அமர்த்தி துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க பெருமையில் என் முகம் மினுமினுங்க இருவரின் உலகமும் இருவரி சுருங்க..