நடிகை ரச்சிதா சொல்லும் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்
ரச்சிதா மகாலஷ்மி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தவர். தமிழில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர்.
ரச்சிதா பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பவராம். அதனாலேயே எதை சாப்பிட்டாலும் பார்த்து பார்த்து சாப்பிடுவாராம். எண்ணெயில் வறுத்த உணவுகளுக்கு எப்போதும் ‘பிக் நோ’வாம்.
அதே போல சர்க்கரையை எல்லாம் எட்டிக்கூட பார்க்க மாட்டாராம். மேலும் ரவை, மைதா போன்ற பொருட்களையும் தவிர்த்து விடுவாராம். வெள்ளை சாதத்தையும் டயட் காரணமாக தவிர்த்து விட்டாராம்.
பிரியாணி சாப்பிட வேண்டும் என தோன்றினால் வாரத்தில் ஒரு நாள் ‘சீட்டிங் டே’ என போகாமல் சும்மா இரண்டே இரண்டு ஸ்பூன் மட்டும்தான் சாப்பிடுவாராம்.
பொதுவாக தான் சாப்பிடுவதற்கான உணவை தானே சமைப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொள்ள மாட்டாராம். காலை உணவாக சத்துமாவு கஞ்சி எடுத்துக் கொள்வாராம். பிறகு ஒரு 11 மணிக்கு ப்ரன்ச்சாக இளநீர், பழ வகைகளை எடுத்துக் கொள்வாராம்.
0