Katrina & Sara : மஞ்சள் லெஹங்காவில் நடிகை கத்ரினா மற்றும் சாரா..யாருடைய லுக் பெஸ்ட்?
கத்ரினா கைஃப், சாரா அலி கான் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகைகள். இவர்களது தீபாவளி லுக்ஸ் குறித்து இங்கு பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகத்ரினா, சாரா இருவரும் மஞ்சள் நிற லெஹங்காவையே அணிந்துள்ளனர். ஆனால் கத்ரினாவின் லெஹங்கா, சிம்பிலாகவும் சாராவின் லெஹங்கா வேலைபாடுகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
அணிகலன்கள் என்று பார்க்கையில் கத்ரினா, ஹெவியான கம்மல் மற்றும் வளையல்களை அணிந்துள்ளார். சாராவோ அழகான வேலைபாடுகள் நிறைந்த நெக் பீஸ் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த வளையல்களை அணிந்துள்ளார்.
மேக்-அப் என்று பார்க்கையில் இருவரும் லைட்டான மேக்-அப் அணிந்திருந்தாலும் சாரா, கண்களுக்கு கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளார்.
கத்ரினா, மெஸ்ஸி பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார், சாரா வேவி மெஸ்ஸி ஃப்ரீ ஹேர் லுக்கை தேர்ந்தெடுத்துள்ளார்.
மொத்தத்தில் இருவரது லுக்கும் அவரவர்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது என்றே சொல்லலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -