Rajini pics: அதே ஸ்டைல், அதே சிட்டிங்! - விண்டேஜ் ரஜினியை ஞாபகப்படுத்தும் மாஸ் க்ளிக்ஸ்

ரஜினி 169 க்ளிக்ஸ்
ரஜினிகாந்தின் அடுத்தப்படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவா இயக்கத்தில் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.
ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார்(Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியது அடுத்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’(Beast) படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். அடுத்து, ரஜினியை வைத்து இயக்கப்போவதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள் “தலைவர்169”(Thalaivar 169) என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170 படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம்