Kalidas Jayaram Engagement : 'நெனச்ச கனவு ஒன்னு நிஜமா நடந்திருச்சு..' நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!
சுபா துரை | 11 Nov 2023 01:57 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.
2
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், தமிழில் வெளியான மீன் குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
3
அதன்பின் இவர் நடித்த பாவ கதைகள் ஆந்தாலஜி தொடர் மூலம் பிரபலம் அடைந்தார்.
4
காளிதாஸ் ஜெயராம் மற்றும் மாடல் அழகி தாரிணி காளிங்கராயரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர்.
5
இந்நிலையில் நேற்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
6
இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.