Love Today:சதம் அடித்த லவ் டுடே திரைப்படம்..ஏஜிஎஸ் உடன் மீண்டும் கை கோர்கிறாரா பிரதீப்?
100ஆவது நாளை எட்டிய லவ் டுடே! ஏஜிஏஸ் உடன் மீண்டும் இணைகிறாரா பிரதீப்?
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம், லவ் டுடே
பிரத்தீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்தார்
இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்தது-இருந்தாலும் சிலர், படத்தில் ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாக கருத்து தெரிவித்தனர்
லவ் டுடே திரைப்படம் 100ஆவது நாளை எட்டியுள்ளது
இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்த கதையே
பிரதீப் ரங்கநாதன் அதே நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது
இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
லவ் டுடேவின் 100ஆவது நாளை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்
அடுத்த படத்திலும் பிரதீப் ரசிகர்களை கவர தவற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது