'ஒரு மனம் நிற்க சொல்லுதே, ஒரு மனம் எட்டி தள்ளுதே' - ரிது வர்மா க்ளிக்ஸ்
குறும்படங்கள் மற்றும் துணை வேடங்களில் தோன்றிய பிறகு, தெலுங்கு படமான 'பெல்லி சூபுலு' படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடித்தார்
’பெல்லி சூபுலு’ படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கேமியோவில் நடித்தார் இதுவே அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம்
அதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்
அதிகம் தெலுங்கு படங்களில் காணப்படும் ரிது வர்மா , தனது தெலுங்கு படங்களுக்கு தானே டப்பிங் செய்கிறார்.
அடுத்து வரவிருக்கும் படம் ‘டக் ஜெகதீஷ். நானியுடன் அவர் நடிக்கும் இந்தப் படம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
ஷர்வானந்த் மற்றும் நாகா ஷௌரியாவுடன் இணைந்து ‘வருது காவலெனு’ என்கிற ஒரு தமிழ்-தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்
’சியான்’ விக்ரம் நடித்த அவரது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ’துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ளார். இன்னும் படம் திரையரங்கு வெளியீட்டில் நிலுவையில் உள்ளது.