Heeramandi Netflix Series : பிரம்மாண்டமான நெட்ஃபிளிக்ஸ் தொடர்... ஹீரமண்டி எதை பற்றிய கதை?
பாலிவுட் திரையுலகில் பரிண்டா எனும் படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த சஞ்சய் லீலா பன்சாலி, 1942 : ஏ லவ் ஸ்டோரி எனும் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.
அவரின் திரைப்பயணம் காமோஷி : தி மியூசிக்கல் எனும் படத்தில் தொடங்கி இன்று வரை ஓயாமல் இருக்கிறது.
தேவ்தாஸ், ராம்-லீலா, மேரி கோம், பாஜிராவ் மஸ்தாணி, பத்மாவத், கங்குபாய் கத்தியாவாடி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் எடுக்கும் பல படங்களில் பிரம்மாண்ட நடனக்காட்சி இடம்பெற்று இருக்கும்.
பழங்காலத்தில் நகரும் கதைகளை எடுப்பதில் வல்லவராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது முதன்முறையாக ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் எனும் வெப் தொடரை இயக்கவுள்ளார்.
இந்த பிரம்மாண்ட தொடரில் மனிஷா கொய்ராலா சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக், ஷர்மின் சேகல் ஆகியோர் நடித்துள்ளனர். ஹீரமண்டி வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது.
சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.