ஸ்வர்ண குரலுக்கு பிறந்தநாள்...
கேரளத்தில் பிறந்து மூன்று வயது முதலே பாட தொடங்கி, கர்நாடக இசைப் பயிற்சி பெற்றபிறகு, சென்னைக்கு வந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வாய்ப்பு கேட்டார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1987-ல் மெல்லிசை மன்னரின் இசையில் வெளியான 'நீதிக்கு தண்டனை' படத்தில் மகாகவி பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' பாடல் ஸ்வர்ணலதாவின் முதல் பாடலாக அமைந்தது.
1990-இல் வெளியான 'சத்ரியன்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்னும் பாடல் ஸ்வர்ணலதாவை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. 'சின்னத்தம்பி' படத்தில் அவர் பாடிய 'போவோமா ஊர்கோலம்' பாடல் பட்டிதொட்டி எங்கும் வெற்றிபெற்றது.
1994-இல் பாரதிராஜாவின் 'கருத்தம்மா' படத்தில் இடம்பெற்ற 'போராளே பொன்னுத்தாயி' பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றார் ஸ்வர்ணலதா.
தென்னிந்திய மொழிப் பாடகர்களில் இந்திப் பாடல்களை மிகச் சரியான உச்சரிப்புடன் பாடுபவர் என்ற நற்பெயரைப் பெற்றவர் ஸ்வர்ணலதா. இதற்காக மூத்த இசையமைப்பாளர் நெளஷாத் அலியால் பாராட்டப்பட்டவர்
காதலின் உச்ச தருணத்தை அது தரும் உன்னத உணர்வை வெளிப்படுத்தும் 'என்னுள்ளே என்னுள்ளே' (வள்ளி) போன்ற பாடல்களாலும் ஸ்வர்ணலதாவின் அபாரமான குரல் வளத்தையும் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்தும் திறனையும் பறைசாற்றுகின்றன.
கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களைத் தன் சகோதரியிடம் கற்றுக்கொண்ட ஸ்வர்ணலதா, தந்தையிடம் ஆர்மோனியம் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி,உருது,மலையாளம்,பெங்காலி,ஒரியா,படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
2008-இல் வெளியான 'பீமா' படத்தில் இடம்பெற்ற 'ரங்கு ரங்கம்மா' தமிழில் ஸ்வர்ணலதாவின் கடைசிப் பாடலாக அமைந்துவிட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -