Happy Birthday K Balachander : இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் பிறந்தநாள்: ஸ்பெஷல் க்ளிக்ஸ்..!
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் ஆஸ்தான குருவாக கே.பாலச்சந்தர் விளங்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகே.பாலச்சந்தரின் திரைப்படங்களை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பாராட்டினார்.
கே.பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர் ஆவார்.
கே.பாலச்சந்தருக்கு முதல்வரின் தந்தை கருணாநிதியுடன் நல்ல நட்பு இருந்தது.
இந்தி பிரபல நடிகர் அமீர்கான் பாலச்சந்தரை ஒருமுறை நேரில் சந்தித்த ஆசிர்வாதம் பெற்று சென்றார்.
கே,பாலச்சந்தர் இயக்கத்தில் 7 படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், அவரது தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார்.
அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு தமிழில் ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் நாகேஷை எதிர்நீச்சல் என்ற படத்தில் நாயகனாக்கி தனது வெற்றிப்பயணத்தை திரைத்துறையில் தொடங்கினார் பாலச்சந்தர்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை தனது கவிதாலாயா நிறுவனம் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்
நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அஜித்குமாருக்கு விருது வழங்கியபோது..
பாலச்சந்தர் இயக்கத்தில் ஆறு படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அதில் சிந்து பைரவி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
பாலச்சந்தர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமின்றி ஏராளமான நடிகர்களை திரைக்கு அறிமுகம் செய்துள்ளார்.
கமல்ஹாசனை வைத்து அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி ஏராளமான வெற்றிப்படங்களை தமிழ் திரைக்கு தந்துள்ளார் பாலச்சந்தர்
இயக்கம், திரைக்கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு என்று தமிழ் சினிமாவில் மாபெரும் பங்களிப்பு அளித்ததால் இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -