Thalapathy 69 : ஹெச். வினோத் படத்தில் நடிக்கப் போகிறாரா விஜய்?
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
2026ம் சட்டமன்ற தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிட உள்ளார் என்பதை தெரிவித்து இருந்தார்.
அதற்கு முன்னர் தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின்னர் சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்து இருந்தார்.
தளபதி 69 படத்தை இயக்க போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார் என்றும் அவரின் ஸ்கிரிப்டை விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -