Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!
லாவண்யா யுவராஜ் | 25 Jan 2024 03:56 PM (IST)
1
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிபெல்'.
2
சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த 'அடியே' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
3
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
4
அதன் தொடர்ச்சியாக ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள 'ரிபெல்' படத்திற்கு சமீபத்தில் தான் யு/ஏ சான்றிதழை சென்சார் குழு வழங்கியது.
5
இப்படத்தில் மமிதா பைஜூ, சுப்ரமணிய சிவா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
6
தற்போது 'ரிபெல்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.